இதனிடையே சசிகலா விடுதலைக்கு எதிராக காங். தரப்பில் அம்மாநில முதல்வருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விதிமுறைகளை மீறிச் சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக 2017ஆம் ஆண்டு அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.
இந்த சிறப்பு சலுகைகளை பெற, பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தது. அந்த குழு இன்னும் விசாரணை அறிக்கையை வழங்காத நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்று கோரியுள்ளனர்.