என்றென்றும் அவர்தான் எங்க முதல்வர்! – உண்மையை உடைத்த ராஜேந்திர பாலாஜி!

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (11:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்க 8 மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என கேள்வி எழுந்தது. இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வரை தேர்வு செய்வோம் என கூறினார்.

ஆனால் அவரது கருத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுத்துள்ளார். தேர்தலுக்கு பிறகு முதல்வரை தேர்வு செய்வதால் பிரச்சினை ஏற்படும் என கூறியுள்ள அவர் என்றென்று முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார்தான் இருப்பார் என கூறியுள்ளார். சசிகலா ஆதரவாளராக இருந்த ராஜேந்திர பாலாஜி சமீப காலம் வரை சசிகலா விடுதலையானால் அதிமுகவில் இணைவார் என கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவர் எடப்பாடியாரை முன்மொழிந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் ராஜேந்திரபாலாஜியின் கருத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிருப்தி இருப்பதாக தெரிகிறது. அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தை கூறியிருப்பது அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்