சசிக்கலா உடல்நல குறைவில் மர்மம்!? – மனித உரிமை ஆணையத்தில் புகார்

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (11:17 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா உடல்நலத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா சிறை தண்டனை முடிந்த நிலையில் வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளார். அவரது விடுதலையை எதிர்நோக்கி பலர் காத்துள்ள நிலையில் அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நலமுடன் உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை நடைபெறுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விரைவில் விடுதலையாக இருந்த சசிக்கலா உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். சசிக்கலாவின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், உரிய விசாரணை தேவை என்று புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்