சசிகலா உயிருக்கு ஆபத்து - சசிகலா தம்பி திவாகரன் பேட்டி...!

வியாழன், 21 ஜனவரி 2021 (08:02 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.
 
தற்போது இதுகுறித்து சசிகலா தம்பி திவாகரன் பேட்டி அளித்துள்ளார். அப்போது, சசிகலாவிற்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை அளிக்கவில்லை என்று கூறியுள்ள அவர் எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவிற்கு உடனே சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் வெறும் xray மட்டுமே எடுத்துள்ளார்கள் என்று அவரது தம்பி திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்