ட்ரம்ப்பின் யூட்யூப் சேனலுக்கு மேலும் தடை நீட்டிப்பு! – சுந்தர் பிச்சை அறிவிப்பு

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (10:54 IST)
அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுள்ள நிலையில் ட்ரம்ப்பின் யூட்யூப் சேனலுக்கு தடையை நீடிப்பதாக யூட்யூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பை தோற்கடித்தார். ஆனால் தோல்வியை ஒத்துக்கொள்ளாத ட்ரம்ப் தொடர்ந்து தேர்தல் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

இந்நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய வன்முறையை தொடர்ந்து ட்ரம்ப்பின் டிவிட்டர், யூட்யூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. தற்போது ஜோ பிடன் அதிபராக பதவியேற்றுள்ள நிலையில் வன்முறை தாக்குதல்களை கருத்தில் கொண்டு முன்னாள் அதிபர் ட்ரம்ம்பின் யூட்யூப் சேனல் மீதான தடை மேலும் நீடிக்கப்படுவதாக சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்