ரூ .3000 அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் - புதுச்சேரி முதல்வர்

Webdunia
புதன், 26 மே 2021 (21:56 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு அருகிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.3000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.   மேலும் இதுகுறித்த கோப்பில் இன்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கினார். இதில் உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள 3,50000 குடும்பங்கள் பயனடையும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்