சென்னையை விட அதிகரித்த கொரோனா பாதிப்பு: என்ன ஆச்சு கோவைக்கு?

புதன், 26 மே 2021 (20:24 IST)
தமிழகத்திலேயே இதுவரை சென்னையில்தான் அதிக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று முதல் முறையாக சென்னையை விட கோவையில் கொரோனா மதிப்பு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று சென்னையில் 3561  பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கோவையில் 4268 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று சென்னையில் 5223 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். ஆனால் கோவையில் குணமாகி உள்ள எண்ணிக்கையை 2787 என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக இருக்கும்போது கோவையில் 31 பேர் மட்டுமே உயிரிழந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சென்னையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 45738 என்பதும் கோவையில் 35707 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்