புத்தாண்டு தினத்தில் இலக்கை தாண்டி மது விற்பனை! எத்தனை கோடி தெரியுமா?

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (06:05 IST)
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் இலக்கு வைக்கப்பட்டு மதுவிற்பனையை தமிழக அரசு நடத்தி வரும் நிலையில் இந்த ஆண்டும் புத்தாண்டு தினத்திற்கு மதுவிற்பனை இலக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதன்படி டிச.31 மற்றும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது. இந்த விற்பனை தொகையின் மதிப்பு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் கடந்த ஆண்டு இருந்த மதுவிலைக்கும் இந்த ஆண்டு மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரூ.175 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ரூ.200 கோடி இலக்கு வைக்கப்பட்ட நிலையில் இலக்கை தாண்டி மதுவிற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்