இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்தி வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகியுள்ளது. எனவே காவல்துறை இரவு 1 மணிக்கு மேல் யாரும் கொண்டாடக் கூடாது என்று அறிவித்துள்ளது. அதேபோல் நள்ளிரவில் கோவில்களை திறந்து வைத்திருப்பதும் ஆகம விதி மீறலாகும். எனவே அரசு அதை தடை செய்யவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.