மது குடித்து வாகனம் ஓட்டினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்; கடும் எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (08:07 IST)
மது குடித்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அபராதம் செலுத்த தவறியவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனும் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மது குடித்து வாகனம் ஓட்டுபவர்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதை அடுத்து மது குடித்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 
 
அபராத தொகை கட்டாதவர்களின் வாகனங்கள் அல்லது இதர அசையும் சொத்துக்கள் நீதிமன்றம் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
 கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சென்னை போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் மது போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடமிருந்து ரூபாய் 1.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்