கடந்த சில மாதங்களுக்கு முன்னேற ட்விட்டரில் புளுடிக் வசதி கொண்டுவரப்பட்டது என்பதும் கட்டண சேவையான இந்த சேவை இந்தியா உட்பட பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ட்விட்டரை அடுத்து பேஸ்புக்கிலும் தற்போது புளுடிக் கட்டண சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புளுடிக் பெறுவதற்கு சந்தா கட்ட வேண்டும் என்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மாதம் ரூபாய் 992.36 எனவும் ஐஓஎஸ் பயனர்களுக்கு மாதம் ரூபாய் 1240 என கட்டணம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் கட்டமாக இந்த வசதி ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது
ப்ளூடிக் வசதிக்கு மாதம் கிட்டத்தட்ட ரூ.1000 கட்டணம் என்ற அறிவிப்பு பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.