மருத்துவமனையில் ஜெ.; தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்த பரபரப்பு தகவல்கள்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (17:22 IST)
உடல் நலக்குறைபாடு காரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என ஆர்.டி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

 
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரின் மரணத்தில் மர்மமே நீடிக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அவர் மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமோ அல்லது வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை என்பதுதான். 
 
இந்நிலையில், நரசிம்ம மூர்த்தி என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.ஐ) பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தார். அதில் அவருக்கு பதிலும் அனுப்பப்பட்டுள்ளது.
 
அதில், ஜெ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல், அவருக்கு எக்மோ கருவி அகற்றப்படுவதற்கு முன்பு, சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தகவல் கூறப்பட்டது.
 
மேலும், மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன் அவருக்கு எந்த தவறான மருந்துகளும் கொடுக்கப்படவில்லை. அவரின் மருத்துவ செலவுக்காக தமிழக அரசு சார்பில் எந்த செலவும் செய்யப்படவில்லை” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்