தேனி மக்களவை தேர்தலில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (15:22 IST)
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஓபி ரவீந்திரநாத் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளார் என்றும் அதனால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் தேனி தொகுதி வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்
 
இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்
 
ஆனால் அதே நேரத்தில் இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்