ராகுல் காந்தி பிரதமரானால் ஊழல், மோசடிதான் இந்தியாவின் தலைவிதியாக மாறும்- அமித்ஷா

சனி, 1 ஜூலை 2023 (13:05 IST)
ராகுல் காந்தி பிரதமரானால் ஊழல், மோசடி தான்  இந்தியாவின் தலைவிதியாக மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்று மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக  பாஜக ஆட்சி அமைந்தது. பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா பல வழிகளில் மாற்றி யமைக்கப்பட்டிருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணிக்காக பாட்னாவில் கூடியவர்கள் ஊழலில் ஈடுபட்டவர்கள்… சோனியா காந்தி ராகுலை பிரதமராக்க விரும்புகிறார். அவர் பிரதமரானால், ஊழல், மோசடி இந்தியாவின் தலைவிதியாக மாறும் என்று தெரிவித்தார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று மீண்டும் மோடி பிரதமராவது உறுதி என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்