ரேஷன் பொருள் தரமில்லையெனில் ஊழியர் திருப்பி அனுப்பலாம் - தமிழ்நாடு அரசு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:01 IST)
நுகர்பொருள் வாணிப கழக கிடக்கில் இருந்து ரேஷனுக்கு வருட்கள் தரமாக உள்ளதா என உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல். 

 
தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலிருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளுக்கு மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் செல்கின்றன. இந்த பொருட்களில் பல பொருட்கள் பல நாட்களாகவே கிடங்கில் இருப்பதால் அவற்றில் சில பொருட்கள் தரமற்றதாகவும் இருக்கும்.
 
இந்த பொருட்களை தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் போது அதில் பொருட்கள் தரமற்றதாக இருந்தாலும் மக்களுக்கு அது விநியோகிக்கப்படும். இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு ஒருவேளை தரமற்ற பொருட்கள் வந்தால் அதை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்