ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு! – விசாரணை நடத்திய சிவகார்த்திகேயன்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (15:52 IST)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பட்டியில் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் பகுதியை சேர்ந்தவர் பரமாத்மா. இவரும் இவரது மனைவியும் ஆடு வளர்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.

நேற்று வழக்கம்போல ஆடுகளை மேய்த்துவிட்டு கொண்டு வந்து பட்டியில் அடைத்துள்ளனர். நள்ளிரவில் ஆடுகள் பயங்கரமாக கத்தவே தம்பதியர் வந்து பார்த்துள்ளனர். அவர்களது பட்டியை சேர்ந்த சுமார் 30 ஆடுகள் படுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளன. ஆட்டை மர்ம விலங்கு ஒன்று தாக்கியுள்ளதாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தாசில்தார் சிவகார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செட்டிபாளையம் கால்நடை மருத்துவமனைக்கு இறந்த ஆடுகள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்