24 மணி நேரமும் பார்கள் திறக்க அனுமதி: தமிழ்நாடு அரசு

ஞாயிறு, 30 ஜனவரி 2022 (07:50 IST)
நட்சத்திர ஓட்டல்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் பார்கள் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் தமிழ்நாட்டில் பப்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் பார்கள் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
 
அதேபோல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டல்களில் காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரை பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்