முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை

வியாழன், 27 ஜனவரி 2022 (16:43 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ரேசன் அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் சில பகுதிகளில் பொங்கல் பை தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றது. மேலும் பொங்கல் பை தொகுப்பு பொருட்கள் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிர்.
 
இதுகுறித்து   முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதுதொடர்பாக தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கள்  முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பொங்கல் பரிசு பொருட்களை தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்