நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் அற்விப்பை வெளியிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் 90 சதவீத வேலைகள் முடிந்ததாகவும் விரையில் கட்சியின் பெயரை வெளியிடுவேன் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், அவரது அடுத்தடுத்த சினிமா படங்கள் அறிவிப்பு வருகிறதே தவிர அரசியல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வந்த பாடில்லை. நானும் அரசியலுக்கு வருவேன் என்ற போக்கில் அவ்வப்போது தேவையான சமயங்களில் மட்டும் சில கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்னெடுத்து வைக்கிறார்.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் அவர் பேசியது பின்வருமாறு,
7 பேர் விடுதலை தாமதமாகிறதே இது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார்.
மேலும், பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, பாஜக அந்த அளவுக்கு ஒரு ஆபத்தான கட்சியா? என கேட்டதற்கு, அப்படிதான் என்று இவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள், அப்படியானால் கட்டாயம் அப்படித்தானே இருக்க முடியும்? என பதில் அளித்தார்.