ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியானது.
இதன்மூலம் 6 முறை 100 கோடி வசூல் சாதனை புரிந்த தமிழ் நடிகர் எனும் சிறப்பு அந்தஸ்தை விஜய் அடைந்துள்ளார். துப்பாக்கியில் தொடங்கி கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார் என விஜய் நடித்த ஆறு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து உள்ளது.
முன்னதாக தமிழில் நடிகர் ரஜினிகாந்த், 5 முறை 100 கோடி வசூல் படங்களை கொடுத்து முதல் இடத்தில் இருந்தார். அந்த சாதனையை தளபதி விஜய், சர்கார் படம் மூலம் முறியடித்து உள்ளார்.