தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் !

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (16:57 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை , வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 நேரத்தில் தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும்,  நீலகிரி , தேனி, கோயமுத்தூர், மற்றும் திண்டுக்கள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்