இழுத்தடிக்கும் கிரண் பேடி: ஏமாந்து திரும்பும் மதுப்பிரியர்கள்!

புதன், 20 மே 2020 (14:35 IST)
புதுச்சேரி மதுக்கடைகள் திறப்படாததற்கான காரணம் தெரியவந்துள்ளது. 
 
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும் போராட்டத்திற்கு பிறகு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு எதிர்ப்பார்த்த வருமானம் கிடைத்துள்ளது. 
 
புதுச்சேரி அரசு நேற்று (19 ஆம் தேதி) முதல் மதுபான கடைகளை திறக்க முடிவு செய்தது. ஆனால், இன்று வரை மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள மதுப்பிரியர்கள் அப்செட்டாகி உள்ளனர். 
 
இந்நிலையில் மதுக்கடைகள் திறப்படாததற்கான காரணம் தெரியவந்துள்ளது. மதுக்கடைகளை திறக்க கொரோனா வரி விதிப்பிற்கான கோப்பிற்கு  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி கொடுக்கவில்லை. 
 
இதனால் மதுகடைகள் இன்றும் திறக்கப்படவில்லை. ஆளுநர் அனுமதி கொடுத்து அரசிதழில் வெளியிட்ட பிறகே மதுகடைகள் திறக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்