நவம்பர் 24, 25ல் மிக கனமழை: வானிலை எச்சரிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (17:55 IST)
நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும், இந்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில் மீண்டும் அடுத்த வாரம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்