சென்னையில் விடிய விடிய கனமழை.. வானில் வட்டமடித்த 6 விமானங்கள்..!

Siva

புதன், 19 ஜூன் 2024 (07:17 IST)
சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை விடிய விடிய பெய்த நிலையில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் அதிகாலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் ஆறு விமானங்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பாக கோழிக்கோடு, கோயம்புத்தூர், மதுரை, டெல்லி, கோலாலம்பூர், மும்பை ஆகிய பகுதியிலிருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நல்ல கனமழை பெய்துள்ளது என்பதும் தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் முகப்பேர், அண்ணா நகர், அரும்பாக்கம், கோயம்பேடு பகுதிகளில் கனமழை பெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் தட்பவெப்ப நிலை குளிர்ச்சியாக இருப்பதை எடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்