ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு.. ஒருவர் சஸ்பெண்ட்..!

Siva

ஞாயிறு, 9 ஜூன் 2024 (15:50 IST)
மும்பை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள்  இயக்கப்பட்டு வரும் நிலையில் மும்பை மாநிலத்தின் ஓடுபாதையில் இன்று ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டதால் பதட்ட நிலை ஏற்பட்டது.

மும்பை விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நிலையில் ஒரு சில நொடிகளில் அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. அந்த விமானமும் தரையிறங்கிய நிலையில் நல்ல வேலையாக ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து உயர பறந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் தொழில்நுட்ப பணியாளர் ஒருவரை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் இது குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவு விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வழியாக உள்ளன.

Edited by Siva

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்