சென்னையில் விடிய விடிய மழை.. 35 விமான சேவைகள் தாமதம்..!

Siva

வெள்ளி, 7 ஜூன் 2024 (07:23 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததை அடுத்து சென்னைக்கு வர வேண்டிய விமானம் மற்றும் சென்னையில் இருந்து கிளம்ப வேண்டிய விமானம் என மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலவே சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது என்பதும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியுடன் தான் வாகனத்தை ஓட்டிச் சென்றனர் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய  18 வானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு வர இருந்த 17 விமானங்கள் என மொத்தம் 35 விமான சேவை பாதிக்கப்பட்டதாகவும் இதனால் விமான பயணிகள் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்று மாலைக்குள் சென்னையில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்