சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva

திங்கள், 17 ஜூன் 2024 (16:56 IST)
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று மாலை அல்லது இரவு சென்னையில் மழை பெய்யும் என்று கூறியுள்ளது 
 
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை நிலவுகிறது என்றும் இதன் காரணமாக ஜூன் 17, அதாவது இன்று முதல் ஜூன் 21 வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொருத்தவரை இன்று இரவு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக கடலோர பகுதிகளில் ஜூன் 17 முதல் 21 வரை சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில்  வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் இயல்பை விட வெப்பம் இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்