அடுத்த 3 நாளைக்கு அடை மழைதான்..! – வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:41 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் அடுத்த கட்டம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் காற்றழுத்த தாழ்வு மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 15ம் தேதி வரை கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ: ரஜினி வீட்டுக்கு புதுவரவு…. சௌந்தர்யா ரஜினிக்கு இரண்டாவது குழந்தை!

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்