மீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி: தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:38 IST)
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து தேசிய தலைவர்களின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது என்பது தெரிந்ததே 
 
ஏற்கனவே ஒரு சில தேசிய தலைவர்கள் தமிழகம் வந்து சென்றார்கள் என்பதும் அவர்களில் சமீபத்தில் மதுரை வந்த ராகுல் காந்தியும் அடங்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க கடந்த 14ஆம் தேதி தமிழகம் வந்த ராகுல் காந்தி மீண்டும் இம்மாதம் 23ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23 24 25 ஆகிய தேதிகளில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 'தமிழ் வணக்கம்' என்ற பெயரில் காங்கிரஸ் நடத்தும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ராகுல்காந்தியின் தமிழக வருகையின் போது திமுக கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் திமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் தனி அணியை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அவர் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்