சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வருபவர் பாலாஜி. மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் இவரது நண்பர் ஒருவரின் 7 வயது மகள் அடிக்கடி பாலாஜி வீட்டிற்கு விளையாட வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் பொம்மை துப்பாக்கி ஒன்றை காட்டி அதை வைத்து சிறுமியின் பெற்றோரை கொன்று விடுவதாக பாலாஜி மிரட்டியுள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய குழந்தை பாலாஜி சொல்வதை கேட்பதாக சொல்ல அவர் அந்த குழந்தையை அடிக்கடி பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். சமீபத்தில் இந்த விஷயத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தினரோடு சேர்ந்து பாலாஜியை அடித்து துவைத்துள்ளனர். அவரை தப்பி விடாமல் பிடித்து அறை ஒன்றில் அடைத்த அவரது மனைவி, அவரே காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு பாலாஜியை பிடித்தும் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.