புரெவி புயல் எதிரொலி: தென்மாவட்ட துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (15:42 IST)
வங்கக் கடலில் உருவாகிய நிவர் புயல் சமீபத்தில் தமிழகம் புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களையும் புரட்டி எடுத்த நிலையில் தற்போது புரெவி என்ற புதிய புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக மாறி புரெவி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, இதனை அடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை கடலூர் காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து மதுரை உள்பட தென் மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்