அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நிவர் புயலால் ஏற்பட்ட மழை, காற்றினால் கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் நெல், கரும்பு, வாழை, தென்னை சேதமுற்றும், கால்நடைகள் பாதிக்கப்பட்டும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் சேத மதிப்பீடுகளை வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறையின் மூலம் ஆய்வு செய்து கணக்கிட்டு வருகிறது.
இந்த அறிக்கையானது தமிழகத்தில் நிவர் புயலால் அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும். தமிழக அரசு நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசிடம் நிதி பெற வைக்கும் கோரிக்கைக்கு ஏற்ப முழு நிவாரண நிதியையும் வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.