பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

Siva

வியாழன், 20 பிப்ரவரி 2025 (17:04 IST)
பெங்களூரில் 16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட அலுவலகத்தை கூகுள் நிறுவனம் திறந்து உள்ளதாகவும், இந்த அலுவலகத்திற்கு "அனந்தா" என்ற சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்திற்கு உலகின் பல நகரங்களில் கிளைகள் உள்ளன. லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள கூகுள் கிளைகளில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வரும் நிலையில், பெங்களூரில் தற்போது புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. மகாதேவ்புரா என்ற பகுதியில், 16 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட இந்த அலுவலகத்தில் 5000 பேர் பணியாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்திற்கு "அனந்தா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. "அனந்தா" என்றால் சமஸ்கிருதத்தில் "எல்லையில்லாதது" என்ற அர்த்தம் கொண்டது. கூகுளின் ஆண்ட்ராய்டு, தேடுதல், மேப் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த அலுவலகத்தில் பணியாற்றுவார்கள் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்