தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

Mahendran

வியாழன், 20 பிப்ரவரி 2025 (18:35 IST)
தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிப்ரவரி 25ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அவர் கோவையில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும், 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
 
இது குறித்து செல்ல செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
"புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்திப் பேசியும், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக, பிப்ரவரி 25ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்."

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்