துணை நடிகைகளை வைத்து பாலியல் பிஸ்னஸ்! – போலீஸில் சிக்கிய மோசடி மன்னன்!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (15:44 IST)
புதுச்சேரி அருகே விடுதி ஒன்றில் துணை நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த மோசடி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி முத்தையால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்துருஜி. புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் உள்ள ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார் இவர். இந்நிலையில் அந்த விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து உடனடியாக அந்த விடுதியில் சோதனை மேற்கொண்ட கோட்டக்குப்பம் போலீசார், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சென்னையை சேர்ந்த இரண்டு பெண்களை மீட்டுள்ளனர்.

விசாரணையில் பியூட்டிஸியனாக பயிற்சி அளிப்பதாக கூறி சென்னையில் துணை நடிகைகளாக இருந்த அந்த பெண்களை இங்கு அழைத்து வந்து சந்துருஜி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து சந்துருஜி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்துருஜி ஏற்கனவே ஏடிஎம் பணம் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்