ஆடியோ போலி.. பிடிஆர் விளக்கம்.. யாரும் நம்ப மாட்டார்கள்.. அண்ணாமலை பதில்..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (18:10 IST)
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ போலி என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை திமுகவினர் தவிர வேறு யாரும் நம்ப மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
ஆடியோ குறித்த நிதி அமைச்சரின் விளக்கத்தை திமுகவினரை தவிர வேறு யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் வெளிப்படையான தடயவியல் சோதனைக்கு ஆடியோவை அனுப்ப நிதியமைச்சரை தடுப்பது எது என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இந்த நிலையில் இந்த ஆடியோ குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆடியோ எளிதில் கிடைக்கும் நவீன தொழில்நுட்பம் மூலம் இட்டுக்கட்டப்பட்டது என்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இனிவரும் காலங்களில் ஆடியோ வீடியோக்கள் வெளியாவது ஆச்சரியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்