பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்: ஈபிஎஸ்

ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (12:58 IST)
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ஆடியோ கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மு க ஸ்டாலின் குடும்பத்தினர் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக கூறிய ஆடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது. 
 
இந்த ஆடியோ குறித்து பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தரப்பிலிருந்து எந்த விதமான எதிர்ப்பும் வரவில்லை என்பதும் திமுக தரப்பிலிருந்தும் எந்த விதமான விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ரூபாய் 30,000 கோடி தொடர்பான ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்