மேலே பாஸ் இருக்கும்போது கீழே இருப்பவர்கள் பேசக்கூடாது: அண்ணாமலை குறித்து ஈபிஎஸ்..!

ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (14:33 IST)
மேலே பாஸ் இருக்கும்போது கீழே உள்ளவர்கள் பேசக்கூடாது என அண்ணாமலை குறித்த கேள்விக்கு காட்டமாக அதிமுக ஒரு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
அண்ணாமலை குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் கூறிய போது கூட்டணி குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே பி நட்டாவுடன் மட்டுமே பேச்சு என்றும் மாநில தலைவர்களுடன் எந்தவித பேச்சும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் மேலே பாஸ் இருக்கும்போது கீழே இருப்பவர்கள் பற்றி எதற்கு பேச வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அண்ணாமலை சமீபத்தில் பேசிய கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்