வேட்புமனுக்களை வாபஸ் செய்யும் ஓபிஎஸ் அணி.. என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (17:59 IST)
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஓபிஎஸ் அணி அறிவித்திருந்த நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்களும் தாக்கல் செய்த நிலையில் வேட்பு மனுவை வாபஸ் செய்ய அந்த அணியினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட இரண்டு வேட்பாளர்கள் வேட்புமன்வை தாக்கல் செய்தனர். ஆனால் இவர்கள் இருவருமே நாளை வேற்றுமை வாபஸ் பெறுகின்றனர் என்று கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ததை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்