ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்.. மதுரையில் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (11:47 IST)
மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தபோது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்ததால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஆளுனருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தியும், கருப்புச்சட்டை அணிந்தும் போராட்டம் செய்ததோடு, ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் செய்வதாக அறிவித்தனர். இந்த நிலையில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்