நவம்பர் 15ஆம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (08:43 IST)
வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மாறியுள்ளது என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தமிழகம் மற்றும் புதுவை இடையே நாளை கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் நவம்பர் 15ஆம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இதன் காரணமாக அடுத்த வாரம் வடக்கு தமிழக கடற்கரை பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து 19 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த வாரம் புதிய புயல் தோன்றினால் மீண்டும் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்