நாளை 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை

வியாழன், 10 நவம்பர் 2022 (13:46 IST)
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் நவம்பர் 11 அதாவது நாளை முதல் சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது 
 
இந்தந் இலையில் சற்று முன் வெளியிடப்பட்ட தகவலில் நாளை மூன்று மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யும்
 
மேலும் நாளை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்
 
மேலும்தர்மபுரி, சேலம், நாகை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரி இடங்களில் கனமழை பெய்யும்,
 
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்