பேருந்துகள் இயங்காது: தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (12:44 IST)
பேருந்துகள் இயங்காது: தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்ததை அடுத்து அரசு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழகம் முழுவதும் தற்போது அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 500க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை 
 
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது ’ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என்று கூறினார் 
 
அதனால் இப்போதைக்கு தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தனியார் பேருந்துகள் பெயரளவுக்கு இயங்கி வந்தாலும் அதில் வருமானம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்