இந்நிலையில் இந்தியாவில் கொரொனா 3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.
கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்களும் தற்போது தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கொரொனா மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில், இரண்டிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் இடம்பிடித்துள்ளது. அதேபோல், வடகிழக்கு மாநிலங்கள், கேரளா,மகாராஷ்டிராவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.