ரவுடியை கைது செய்ய காத்திருந்த போலீஸ்; தப்ப வைத்த வார்டன்கள்! – சேலத்தில் பரபரப்பு!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (10:19 IST)
சேலத்தில் சிறையில் இருந்த கைதியை வேறொரு வழக்கில் கைது செய்ய போலீஸார் காத்திருந்த நிலையில் வார்டன்களே கைதியை சிறையிலிருந்து தப்ப வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் ரவுடி வசந்த். இவர் சமீபத்தில் வழிபறி கொள்ளை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

நேற்று அவர் ஜாமீனில் வெளிவர இருந்த நிலையில், மற்றொரு வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த போலீஸார் அவரை கைது செய்ய சிறைச்சாலை வாசலில் காத்திருந்துள்ளனர். ஆனால் வசந்த் வெளியே வரவே இல்லை. சிறைக்குள் சென்று விசாரித்தபோது அவர் முன்பே வெளியேறிவிட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் முன்வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தும் வசந்த் வரவில்லை என்பதை போலீஸார் உறுதி செய்தனர். இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில் சிறை வார்டன்கள் வசந்தை பின்பக்கமாக தப்ப வைத்தது தெரிய வந்துள்ளது. இதனால் இரு வார்டன்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்