சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதேபோல், தமிழகம் மற்றும் வடக்குக் கேரளத்தின் மீது கீழடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால், மழைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.