விஸ்மயா தற்கொலை: கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை!

செவ்வாய், 24 மே 2022 (14:16 IST)
கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் விஸ்மயா தற்கொலைக்கு கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 
கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த விஸ்மயா என்ற இளம்பெண்ணுக்கும், கிரண் குமார் என்ற நபருக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடந்தது. இந்நிலையில் கிரண் குமார் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை துன்புறுத்தியதால் கடந்த ஆண்டு ஜூன் 21 அன்று விஸ்மயா தற்கொலை செய்து கொண்டார்.
 
இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் வரதட்சணை கொடுமை குறித்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல்வேறு வரதட்சணை கொடுமை வழக்குகளும் வெளிச்சத்திற்கு வந்தன. நேற்று கேரள நீதிமன்றத்தில் விஸ்மயா வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் விஸ்மயா தற்கொலைக்கு காரணமான அவரது கிரண் குமார் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. 
 
கிரண்குமாருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து விரைவில் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் விஸ்மயா கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொல்லம் நீதிமன்றம் விதித்தது. கிரண்குமாருக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித் தண்டனையை அறிவித்தார். 
 
ரூ.12.50 லட்சம் அபராதம் விதித்ததுடன் அதில் ரூ.2 லட்சத்தை பெண்ணின் பெற்றோருக்கு  தரவும் ஆணை பிறப்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்