தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுடன் சமரசம்.. ஜாமின் கேட்கும் பூசாரி கார்த்திக் முனுசாமி..!

Mahendran
புதன், 29 மே 2024 (18:05 IST)
தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் உடனே ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
சென்னையை சேர்ந்த பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரில் பூசாரியான கார்த்திக் முனுசாமி கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை என புகார் அளித்த பெண் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.
 
முன்னதாக சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் இளம்பெண் ஒருவர் அங்கு பூசாரியாக இருந்த கார்த்திக் முனுசாமி என்பவரிடம் பழகியதாகவும், இருவரும் நட்பாக பழகிய நிலையில் ஒருநாள் பூசாரி கார்த்திக் முனுசாமி, இளம்பெண்ணை வீட்டில் விட்டு விடுவதாக காரில் அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர் தீர்த்தத்தை கொடுத்த நிலையில் தீர்த்தத்தை கொடுத்ததும் மயங்கி விழுந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் திடீரென கார்த்திக் முனுசாமி தலைமறைவானார். இந்த நிலையில் அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை  நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்