மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் நீதி வாரியம் அதிரடி..!

Mahendran

வியாழன், 23 மே 2024 (10:13 IST)
மதுபோதையில்  விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில் அந்த ஜாமினை சிறார் நீதி வாரியம் ரத்து செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 புனேவில் கடந்த ஞாயிறு அன்று 17 வயது சிறுவன் மது அருந்திவிட்டு 160 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டிய நிலையில் அந்த கார் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியதால் அதிலிருந்து இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
 
இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்பதால் கட்டுரை எழுத வேண்டும் என்ற நிபந்தனை விதித்து 15 மணி நேரத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 
 
இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று போலீசார் சிறார் நீதி வாரியத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சிறார் நீதி வாரியம் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து சீர்திருத்த முகாமில் அடைக்க உத்தரவிட்டது. ஜூன் 5 வரை அங்கு அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்