அவங்க இரண்டு பேர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
வியாழன், 14 மே 2020 (19:29 IST)
விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தவர்களை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார்
 
இந்த சந்திப்பின்போது அவர் ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’பத்தாம் வகுப்பு சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொலை செய்தவர்களை போலீசார் என்கவுன்டர் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
 
மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற கொடூர செயல்கள் நடைபெறாத வகையில் தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சிறுமியை கொலை செய்தவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்